சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் பள்ளியின் பழைய மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சிறிய முயற்சியாக, செய்யது முகம்மது ஆசாத் ஆகிய நான் இந்த வலைப்பூவை உருவாக்கி உள்ளேன். பழைய நண்பர்களோடு தங்கள் நட்பை தொடர விரும்புவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ விரும்புவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
என்னைப் பற்றி...
சாத்தான்குளத்தில் பிறந்து தூய இருதய ஆண்கள் பள்ளியில் மேல்நிலைக் கல்வி முடித்தேன். சென்னையில் வி.ஜி.பி. தங்கக்கடற்கரையில் பணி செய்தேன்.பின்னர் அங்கிருந்து நடிகர் திரு.சரத்குமார் அவர்களின் இல்லத்தில் பணி செய்தேன். அவரது மேலாளர் திரு.ரகுபதி மற்றும் திருமதி மல்லிகா கந்தசாமி அவர்களின் சிபாரிசின் பேரில் தினகரன் நாளிதழில் பணிக்கு சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி செய்தேன். தற்போது விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் இதழில் பணி செய்து கொண்டிருக்கிறேன்.
என்னோடு பயின்ற நண்பர்களை இந்த வலைப்பூ வழியாக தொடர்பு கொள்ள விருப்பப் படுகிறேன்.

No comments:
Post a Comment